காதல் சொல்ல நேரமில்லை
உனது நிழலாய்
நான் தொடர்ந்துவர
நீயோ கைப்பேசியிடம்
கொஞ்சியபடி உன்னுலகத்தில்.....
உயிருடன் நான்
எரிந்து கொண்டிருக்க .....
நீயோ குறுந்தகவலை
அனுப்பியபடி உன்னுலகத்தில்.....
காதலை தெரிவிக்கும்
தயக்கமுடன் நான்.....
நீயோ அழைப்பு
துண்டிக்கும் ஒவ்வொருமுறையும்
காதல்பேசியபடி உன்னுலகத்தில்.....
"ச்சீய் காதலை
உறைக்கக்கூட நேரமில்லையே " என்று
கைப்பேசியிடம்
கோபமும் பொறாமையும்
கலந்ததோர் பார்வையுடன்
என் மனம்
பிறகு புரிந்தது
உனக்கான
என்னுடைய காதல்
அழியபோவதில்லை.....
ஆகையினால்
இன்று
கல்லறையில் காத்திருக்கிறேன்
நின் கைப்பட்ட
மலர்களுக்காக.....
அறிவாயோ நீ
வருவாயோ எனைத்தேடி?
உன்
கைப்பேசிக்கு
சிறிதுநேரம்
விடைகொடுத்துவிட்டு!!
தென்றல்
மோதலில்
விருப்பமின்றி இருந்தவள்
இன்று
விரும்புகின்றேன் மோதலை
அந்த மெல்லியகாற்று
என்னைத் தீண்டுகையில்..
superb lines :)
ReplyDeleteAwesome pakki
ReplyDeleteAwesome dear :) :)
ReplyDelete