பேருந்தில்
"அனுபவம் மட்டுமல்ல ஒரு பாடமென்றே சொல்லலாம்.." இளம்பெண்கள் கவனத்திற்கு... பொங்கல் லீவ்னு சந்தோஷமா வீட்டுக்கு போயிருந்த சமயம் (ஹாஸ்டல்ல தங்கி படிக்றேங்க). நல்லா வீட்டு சாப்பாடு, தூக்கம், அப்பா அம்மாவோட அரட்டை, நண்பர்கள்,இரவு நேர டிவி ,பொங்கல் வழிபாடு, ஷாப்பிங்னு சுகமா இருந்துச்சு.. நமக்குதான் ஏழு நாளும் சரசரனு வேகமா ஓடிடுமே! காலேஜ்கு போகவே மனசில்லாம ஒரு வழியா எப்டியோ கிளம்பி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தேன் அப்பாவோட. பயங்கர கூட்டம் SETC கிடைக்காமல் ஏதோ ஒரு பஸ்சுனு ஏறினதுதான் நான் பண்ண தப்பு. இரண்டுபேர் அமரும் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அப்பாவும் சற்று கவலையுடன் பஸ் புறப்படும் வரை டாட்டா காட்ட மனசில்லாமல் நின்று கொண்டே இருந்தார்.. இதுதான் பெத்த மனம் என்று தோன்றியது.. டெல்லி சம்பவத்தின் கூக்குரலோ என்னமோ... ஜன்னலோரம் ஜாலியா வேடிக்கை பார்த்துகொண்டு நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது பயணம். சிறிது நேரம் கழித்து கூட்டம் பெருகவே, வயசான தாத்தா ஒருவர் என்னிடம் சற்று இடம் கேட்டபடி அருகில் வந்தார்..வயசானவரே பாவமேனு சரி உக்காரு ங்கனு இடமளித்தேன். பெரியவரோ " தாத்தாவுக்கு ஜன்னலோரம் விடு கண்ணு" என்றார்.. சரி ஓகேனு அவருக்கு வழிவிட்டவாறு அருகில் அமர்ந்து கொண்டேன்.. அவரோ கொஞ்ச நேரத்தில் ஏதேதோ சொந்த கதை சோக கதையெல்லாம் உளற அவர் ஆரம்பித்தார். செல்போன்ல பாட்டு கேட்டபடிஇருந்த எனக்கு இலேசாக சந்தேகம் "இவர் குடித்துவிட்டு புலம்புகிறாரோ" என்று. பிறகு பின்னால் அமர்ந்திருந்த ஒருவரிடம் (ஒரு 45 வயதிருக்கும்),"இவர் குடித்துவிட்டு உலருகிறாரா" என்று சற்று பயத்துடன் மெல்லிய குரலில் கேட்டேன்.
அவர் ஆமாம் என்று தலையசைத்தார்.. பயத்தில் ஆழ்ந்த என்னை அழைத்து அவருடைய இருக்கையில் அமர்ந்துகொள்ள சொன்னார்..அவருக்கு நன்றி கூறி இருக்கை மாறிகொண்டேன்.. ஆனால் பெரியவரோ தன்னிலை மறந்து " கண்ணு தாத்தாக்கு ஒரு 50 ருபாய் குடு தாயி" என்று கேட்டுகொண்டே இருந்தார.
என்ன ஒரு ஆதங்கம் என்றால், நடத்துனரிடம் "கொஞ்சம் பாத்துக்குங்க" என்று அப்பா கெஞ்சியபடியே வேலைக்கு புறப்பட்டார்.. ஆனால் அவர்??????
இப்படியும் சிலர் என்று பெருமூச்சு வாங்கிக்கொண்டேன்
ஆனால் ஒன்று 2014லும் நல்ல உள்ளம் படைத்த அன்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். "முன்னாடி உக்காருங்கம்மா " என்று பாதுகாப்பு கருதி உதவும் நடத்துனர்களும் உண்டு.
எது எப்படியோ "வருமுன் காப்போம்" என்றிருப்பதே பெஸ்ட்னு தோணுது.. ஸோ மை டியர் யங் லேடீஸ் தகுந்த நேரத்திலேயே புறப்படுங்க! அப்பா அம்மாவும் நிம்மதியா இருப்பாங்க!
ஸ்ரீரங்கத்திலும் அராகம்!
எது எப்படியோ "வருமுன் காப்போம்" என்றிருப்பதே பெஸ்ட்னு தோணுது.. ஸோ மை டியர் யங் லேடீஸ் தகுந்த நேரத்திலேயே புறப்படுங்க! அப்பா அம்மாவும் நிம்மதியா இருப்பாங்க!
ஸ்ரீரங்கத்திலும் அராகம்!
அன்று விசேஷமான புரட்டாசி சனிக்கிழமை . விரதமிருந்து பெருமாளை தரிசிக்க தவமிருக்கும் பக்தர்களோ ஏராளம்.வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து குவியும் கூட்டமும் இதிலடக்கம் .இத்தகைய விசேஷ நாளில் கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம் சிறப்பு தரிசினம் 50,100,150/- என தனித்தனியே க்யூ அமைக்கபட்டுள்ளது.
பக்தர்களும் வேண்டிய கட்டணத்தை செலுத்தி வரிசையில் ஆரம்பத்தில் அமைதியாகத்தான் வலம்வந்து கொண்டிருந்தார்கள். பின்னர் திடீரென பக்தர்களிடையே கூச்சல்!விஷயம் என்னவென்றால் கட்டணம் செலுத்தியவர்கள் வரிசையில் கட்டணம் செலுத்தாதவர்கள் அத்துமீறி நுழைந்ததுதான்.
"பொதுவாக கோவிலிற்கு எதற்கு செல்கிறோம்? மன அமைதியை எதிர்பார்த்து அல்லவா வருகிறோம்? பக்தர்களிடம் பக்தி மறைந்து ஏன் அற்பத்தனமாக அத்துமீறலும் வேண்டாத வீம்பும் எட்டிபார்க்கிறது? பாவம் சின்னஞ்சிறு அறியா குழந்தைகள்,முதியவர்கள்,ஊனமுற்றவர்கள் என்பதையும்கூட பொருட்படுத்தாமல் நசுக்கித் தள்ளிவிட்டு பெருமாளை காண்பதற்கு பெயர் பக்தியா?
"அன்பிலும் அமைதியிலும் மற்றும் நேர்மையிலும் மட்டுமே பக்தியை பரிபூரணமாக உணரமுடியும் என்பதை சிந்திப்பார்களா?"
ஸோ மை டியர் ப்ரெண்ட்ஸ் எது பக்தினு நீங்களே முடிவுபண்ணுங்க :)
sad :P
ReplyDeletetrue story !!
ReplyDeleteNandraga Sonnai Akka!!!
ReplyDeletebrilliant !!
ReplyDelete